News March 29, 2025
சிறுவர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் நிறுவனர் அரிமதி இளம்பரிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை வரும் 15ஆம் தேதிக்குள் இளைஞர் அமைதி மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
Similar News
News April 3, 2025
புதுச்சேரி அரசு தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணிகளை நிரப்புவதற்காக வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றது. செய்முறை தேர்விற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
News April 2, 2025
நோய் நொடியை தீர்க்கும் புதுவை லிங்கேஸ்வரர் ஆலயம்

புதுவை கண்டமங்கலம் அருகே நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது சோழர் கால கோயிலாகும். இங்குள்ள நவகிரகங்கள் கருவறையில் உள்ள சிவனை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர். இங்குள்ள சிவனை வணங்கினால் திருமணத் தடை, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, இழந்த செல்வம் திரும்பப் பெறல், தம்பதி இடையே ஒற்றுமை, நோய் நொடியின்றி நீண்ட வாழ்வு பெறுதல், ஆகியவை அமையும் என்பது நம்பிக்கை. நண்பர்கள் & உறவினர்களுக்கு பகிரவும்
News April 2, 2025
புதுச்சேரியை சேர்ந்தவர் கடலூரில் என்கவுண்டர்

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.