News May 16, 2024
சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைப்பு

புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6-வயது சிறுவனை ஸ்டெல்லா என்பவரின் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதனை ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேஷன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 4, 2025
செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர்மழை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது
News December 4, 2025
சென்னையில் 12 மணி நேரத்தில் 39 இண்டிகோ விமானங்கள் ரத்து

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகளால் விமானங்கள் ரத்து என்பது தொடர்கதையாக மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் 19 விமானங்களும் வருகை விமானங்கள் 20ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
News December 4, 2025
சென்னை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


