News March 18, 2025
சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது

தஞ்சாவூர், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா (61) என்ற முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஜபருல்லாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News March 19, 2025
சிவனின் தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தெரியுமா?

பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தினால் சிவபெருமான் அவர் தலையை கொய்தார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தான் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இத்தலத்தில் சிவனின் தோஷத்தை நீக்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. அறிய SHARE செய்யவும்
News March 19, 2025
பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு

ஸ்கில் இந்தியன் மற்றும் தமிழ்நாடு கல்வி உதவி மையம்(Tnedusupport) இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹15,000, மூன்றாம் பரிசு ₹10,000 மேலும் 1000 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
News March 19, 2025
இந்திய கடற்படையில் வேலை, ரூ.81,100 வரை ஊதியம்

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ் – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <