News January 23, 2025
சிறுமி மீது பாலியல் தாக்குதல்; 2 பேர் மீது குண்டாஸ்

குமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த பைசல்கான்(40), மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரதீஷ்(27) ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக SP அலுவலகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 19, 2025
குமரி: பணி நெருக்கடி – ஊழியர் தற்கொலை முயற்சி

குழித்துறை நகராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்த்(30)க்கு ஆணையாளர் சுபிதாஸ்ரீ சில நாட்களாக அதிக பணிச்சுமை நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்து நேற்று சென்ற ஆனந்த் குளியல் அறையில் விஷம் குடித்து உள்ளார். மயங்கிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
News November 19, 2025
குரியன்விளை கோவிலில் 1008 இளநீர் அபிஷேகம்

களியக்காவிளை அருகே குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாள் தேவியின் சுயம்புவில் இளநீர் அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளான நேற்று கணபதி ஹோமம் விக்கிரமன் சுவாமி தலைமையில் நடந்தது. தொடர்ந்து தேவியின் சுயம்பு எழுந்தருளல், பக்தர்கள் சமர்பித்த 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.
News November 18, 2025
கன்னியாகுமரி: வாக்காளர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


