News April 18, 2025
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

கீழ்வேளூரை சேர்ந்தவர் மாதவன், இவர், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக, ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021, ஜூன் 28ம் தேதி அளித்த புகாரி பேரில் மாதவன் போக்சோ சட்டத்தில் கைதானார். இதையடுத்து நாகை போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார்.
Similar News
News November 6, 2025
நாகை: எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தில் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 -25 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தலா ரூ.100000 வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நவ.17க்குள் வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்
News November 6, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் 163 பாகம் நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 6, 2025
நாகை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


