News April 16, 2025
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிய கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு 3 லட்ச ருபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 22, 2025
செங்கல்பட்டு: மாட்டுக்கு பாலியல் ரீதியாக தொல்லை!

பல்லாவரம் அருகே பசுமாட்டை மர்ம நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வீடியோவாக எடுத்து பெண் ஒருவர் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அனுப்பிய நிலையில், விலங்கு நல ஆர்வலர் நடத்திய ஆய்வில் அந்த நபர் மாட்டிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News November 22, 2025
செங்கல்பட்டு: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி & அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (நவ-22) காலை சுமார் 9.00 முதல் மாலை 3.00 வரையிலும், தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 9499055895 / 9486870577 இந்த எண்ணில் அழைக்கவும். ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


