News April 27, 2025

சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய கொத்தனார் 

image

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி  கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய செம்பனார்கோயில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் சுந்தர்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

Similar News

News November 28, 2025

BREAKING மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். SHARE NOW!

News November 28, 2025

மயிலாடுதுறை: வங்கி வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து டிச.,1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 28, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!