News May 15, 2024
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, செங்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அவரது உறவினரான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சைல்ட் லைனில் வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 27, 2025
தி.மலை: 3 நாட்களுக்கு கனமழை; வந்தது வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்ற அறிவிப்பு எதிரொலியால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
News November 27, 2025
தி.மலை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
தி.மலையில் பயங்கர தீ விபத்து!

திருவண்ணாமலை: காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பூர கடையில் நேற்று(நவ.26) இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த கடைகள் மற்றும் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.


