News April 6, 2025
சிறுமியை கொலை செய்த காதலன் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.
Similar News
News November 17, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை!

காஞ்சிபுரம்: ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை(நவ.18) பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை போன்ற பகுதிகளில் நாளை(நவ.18) காலை 9:00 – 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
காஞ்சிபுரத்தில் மழை ; பள்ளிகளுக்கு விடுமுறையா..?

காஞ்சிபுரம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுபடி, இன்று(நவ.17) காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்ரந்து, வரும் நவ.21ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.
News November 17, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (நவம்பர். 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


