News January 24, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல் – வாலிபரிடம் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக ராமநாதன்

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் என்பவருக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை பாஜக மாநில மீனவர் பிரிவு அமைப்பாளர் சீமா இன்று (செப்.13) அறிவித்துள்ளார்.
News September 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செப்.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News September 13, 2025
ராமநாதபுரம் மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <