News January 22, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டு சிறை

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நஷீர் பாஷா என்பவர் 2017 ஆம் ஆண்டு எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம்விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

Similar News

News November 14, 2025

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்சியர் ஆய்வு

image

75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வு நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 14, 2025

மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடும் வகையில் இன்று (நவ.14) “மினி மாரத்தான்” போட்டியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி உட்பட பலர் உள்ளனர்.

News November 14, 2025

விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

error: Content is protected !!