News September 14, 2024
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்ததில், சிறுமியின் உறவினரான 14 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. மேலும் சதீஷ்குமார்(32) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
JUST IN: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை சென்னையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
FLASH: ‘டிட்வா’ புயல்; சென்னைக்கு இன்று ரெட் அலெர்ட்!

‘டிட்வா’ புயல் காரணமாக சென்னையில் கடந்த 7 மணி நேரத்திற்கும் மேலாக, கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 20 செ.மீ கனமழை பெய்யும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாளை பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா? என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News December 1, 2025
சென்னை: ஊர்க்காவல் படையில் சேர நல்வாய்ப்பு!

சென்னை , பெருநகர ஊர்காவல் படைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18-50-க்குள் இருக்கும் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


