News April 6, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி (52). இவர் திருப்பத்துாரில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: திருப்பத்தூருக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருப்பத்தூருக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
திருப்பத்தூர்: பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக பாட்டிக்கு விபூதி!

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி வசந்தா (66), கட்டிட தொழிலாளி. இவரது பேரன் பிரசாந்த் (20) என்பவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவர் 5 பவுன் நகையை வசந்தாவிடம் பெற்றுக்கொண்டு டிமிக்கி காட்டியுள்ளார். புகாரின் பேரில் பிரவீன் கைது செய்யப்பட்டார்.
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


