News March 29, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

image

திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரமங்கலம் கிராமத்தில் கடந்த 29.08.2019 ஆம் தேதி சற்று மனநிலை சரியில்லாத 15வயது குழந்தையை கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர் தொடர்பான வழக்கு, திருச்சி மகிழா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி ஸ்ரீவத்சன், சம்மந்தப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 பணமும் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News April 3, 2025

திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுர காளியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் மணமேட்டில் இருந்து பவித்திரம் செல்லும் சாலை வழியாக சென்று தோளூர்பட்டி இனைப்பு சாலை வழியாக நாமக்கல் புறவழி சாலையை அடையலாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News April 3, 2025

வயலூர் முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு

image

பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வளர்பிறை சஷ்டி நாட்களில் முருகனை வழிபட்டால் நீண்ட காலமாக தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று வயலூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். SHARE NOW!

News April 3, 2025

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

image

சமயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி விடுதியில் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான அரியலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் விடுதி வார்டனையும், அவரது நண்பரையும் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

error: Content is protected !!