News February 21, 2025
சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி அடுத்த கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதேபோல, சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்த முகமதுயாகூப் என்பவர் 6ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
கள்ளக்குறிச்சியில் மேலாண்மை நிர்வாகி பணிக்கு வேலைவாய்ப்பு

கள்ளக்குறிச்சியில் ஸ்டார் குரூப் நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகி பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18 லிருந்து 26 வயதுக்குட்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

கள்ளக்குறிச்சியில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலனி தயாரிப்பு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை(ஏப்.22) காலை 10 மணி அளவில் சென்ட்ரல் புட்வேர் ட்ரைனிங் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.