News August 8, 2024
சிறுதாவூர் அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்

திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். சிறுதாவூரில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இன்று பத்தாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 15, 2025
செங்கல்பட்டு: 3000 கோடி வீண்?

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரும்புலியூர்-மஹிந்திரா சிட்டி இடையே ரூ. 3,100 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் அமைக்கப்பட இருந்தது. இருந்தும் தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் தொடங்கப்படாவிட்டால், இத்திட்டம் கைவிடப்படும்.
News December 15, 2025
வேதகிரீஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் இங்கு சங்காபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று (டிசம்பர்-15) கார்த்திகை மாத ஐந்தாவது சோமவார தினத்தை ஒட்டி சங்க அபிஷேகம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 15, 2025
வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று 1008 சங்காபிஷேகம்