News August 14, 2024
சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
தேனி: குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

தேனி மாவட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலை கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் அல்லது தமிழ்நாட்டில் எந்த ஒரு நியாய விலை கடைகளிலும் டிச.31ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 18, 2025
தேனி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 18, 2025
தேனி: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்

போடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் வாஞ்சிநாதன், கெளசல்யா. அரசு பள்ளி ஆசிரியரான வாஞ்சிநாதனுக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட கெளசல்யாவையும், இவரது குழந்தைகளையும் வாஞ்சிநாதன் தாக்கி கெளசல்யா பெயரில் உள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றி தருமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


