News April 28, 2025
சிறப்பு வேட்டை: லாட்டரி விற்றவர்கள் 12 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு 5 குழுக்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று ஒரு நாள் சிறப்பு வேட்டை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1,42,000 மற்றும் 9 செல்போன்கள் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 5, 2025
மயிலாடுதுறை போலீசார் எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் வழியாக வரும், எஸ்பிஐ அல்லது பிற வங்கியின் ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ வேண்டாம். இதன் மூலம் உங்களது தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டு, உங்களது தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம். போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 5, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News November 4, 2025
மயிலாடுதுறை: மரம் நடும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியாளர்களுடன் கலந்துரையாடி விவரங்களை கேட்டறிந்தார்.


