News April 22, 2025

சிறப்பு ரயில் இயக்கம் 

image

போத்தனூர்- பரவுனி (06055) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் மே 24ந் தேதி வரை சனிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரவுனி சென்றடையும். பரவுனி-போத்தனூர் (06056) வாராந்திர சிறப்பு ரெயில் பரவுனியில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

Similar News

News December 6, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூரில் சமூக நீதி மற்றும் பொதுவாழ்வில் தரம் உயரப்பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்குரியவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது ₹1 லட்சம், தங்கப் பதக்கத்தை உள்ளடக்கியது. 2025-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி தேதி டிச.18 ஆகும். தகுதியுள்ள நபர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டர் மனீஷ் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

திருப்பூரில் இலவச Sewing Machine ஆப்ரேட்டர் பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Specialized Sewing Machine Operator பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் Sewing Machine செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். மேலும் விபரங்களுக்கு 7871133699 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<> nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!