News January 24, 2025
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

2025 வருடத்தின் தை அமாவாசையானது வரும் 28ஆம் தேதி வருவதையொட்டி தரிசனத்திற்காக கோவையிலிருந்து பல்வேறு ஆன்மீக நபர்கள் ராமேஸ்வரம் பயணம் செய்வதை சுட்டிக்காட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இந்நிலையில், கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 27 மற்றும் 28ஆம் தேதி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 30, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (30.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
தொண்டாமுத்தூரில் கொத்தாக தூக்கிய செந்தில்பாலாஜி

கோவை: தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் செந்தில்பாலாஜி தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர். தொண்டாமுத்தூரில் கடந்த 3 முறையாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ-வாக இருந்து வரும் நிலையில், அங்கு மாற்றுகட்சியினர் கொத்தாக திமுகவில் இணைந்தது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
News October 30, 2025
கோவை: சொந்த வீடு வேணுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


