News August 17, 2024

சிறப்பு தொழில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது. மேலும் 04565-232210 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.17) தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

சிவகங்கை: ஆதார் கார்டில் இலவச முகவரி மாற்றம்..!

image

சிவகங்கை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

சிவகங்கை: கிரேன் மோதி ஒருவர் பரிதாப பலி!

image

மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் முத்துக்கருப்பன் (45). இவா் திருப்புவனம் ஒன்றியம் புலியூரில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இயந்திரம் முத்துக்கருப்பன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் கிரேன் ஓட்டுனர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 7, 2025

காரைக்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியை சேர்ந்த சுப்பு என்பவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மலைப் பாம்பு இருப்பதாக காரைக்குடி தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர்

error: Content is protected !!