News June 26, 2024

சிறப்பு கடன் வழங்கும் முகாம்

image

தென்காசி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என இணைப்பதிவாளர் நரசிம்மன் இன்று கூறியுள்ளார். அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) நில வள வங்கிகள் மூலம் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

தென்காசி : பட்டாவில் திருத்தமா??

image

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

தென்காசி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பியுங்க. டிகிரி முடித்தவர்களுகு SHARE செய்து உதவுங்க.

News September 15, 2025

தென்காசி: ஆசிரியை வீட்டில் திருட்டு

image

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நேற்று செப்.14 காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுக்குறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

error: Content is protected !!