News November 24, 2024
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Similar News
News December 11, 2025
நாமக்கல்லில் மாபெரும் மருத்துவ முகாம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம், வரும் (13.12.2025) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, இலவச முழு உடற் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை பெறலாம்.
News December 11, 2025
நாமக்கல்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

நாமக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News December 11, 2025
நாமக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


