News April 6, 2025
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருவேங்கடமுடையான்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் பங்குனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 28, 2025
விருதுநகர்: ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

விருதுநகர் ரயில்வே நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தில் ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. தோரண நுழைவாயில் சுற்றுச்சுவர் கூரையுடன் கூடிய டூவிலர் கார்கள் காப்பகம், முகப்பு மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் நடை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம் சிங் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
News November 28, 2025
விருதுநகர்: லாரி மீது மோதிய கார் விபத்தில் இளைஞர் படுகாயம்

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் நித்திஷ்(21). இவர் நேற்று நவ.27 காரில் அருப்புக்கோட்டை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது ராமசாமிபுரம் விலக்கில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தூத்துக்குடியில் இருந்து மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற லாரியின் மீது மோதி நித்திஷ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
விருதுநகர்: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

விருதுநகர் மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இங்கு <


