News March 26, 2025
சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் பேசிய எம்எல்ஏ கல்யாணசுந்தரம் இன்ஜினியரிங் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.ஆனால், 8ம் இடத்தில் இருந்த இக்கல்லுாரி இக்கல்லுாரி 238 238 தள்ளப்பட்டுள்ளது என்றார் என்றார். பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி வரும் காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்
Similar News
News April 2, 2025
கார்கள் நேருக்கு நேர் மோதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
News April 2, 2025
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மேற்கொண்டு ஆய்வின் போது பாகூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் நேற்று புதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
News April 2, 2025
புதுச்சேரியில் 15 மதுக்கடைகளுக்கு சீல்

புதுச்சேரியில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்காதவர்களுக்கு கலால்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு கலால்துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் முதலியார்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 15 மதுக்கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.