News December 5, 2024
சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி யர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சின்ன உடைப்பு பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News January 1, 2026
மதுரை: பிள்ளைகள் கைவிட்டதால்… மூதாட்டி சோக முடிவு!

பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(93). கணவருடன் தனித்து வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்து போனார். இவரது குழந்தைகளில் சிலர் இறந்து போன நிலையில், இருக்கும் மற்ற குழந்தைகள் இவரை கவனிக்கவில்லை. இதனால் எருக்க இலையை அரைத்து குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
மதுரை: கார் ஏறி இறங்கியதில் ஒருவர் பரிதாப பலி

மதுரை பெருங்குடி ரோட்டில் உள்ள சாய் ஓட்டல் அருகே, சாலையோரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்திருந்தார். அங்கு நிறுத்தி இருந்த காரை அதன் உரிமையாளர் எடுக்கும் போது, படுத்திருந்தவர் மீது கார் ஏறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மதிச்சியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


