News February 17, 2025
சின்னதாராபுரம் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கரூர், தாராபுரம் சாலையில் வங்கி, போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் இதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கள் வண்டிகளை பார்க்கிங் இல்லாததால் அப்படி நிறுத்தி விட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை அமர்த்தி கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
Similar News
News October 17, 2025
கரூரில் சம்பவ இடத்திலே துடிதுடித்து பலி!

கரூர் வாங்கல் அருகே செம்மடை சாலையில், மணிகண்டன் (27) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் விஜயகுமார் ஓட்டி வந்த கனரக வாகனம் மணிகண்டன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி மணிகண்டன் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
News October 17, 2025
கரூரில் விஜய்க்கு 23 % ஆதரவு; வெளியான ரிப்போர்ட்!

கரூர் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து மீண்டும் தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கருத்துக்கணிப்பு முடிவில் கரூர் சம்பவத்தால் விஜய்க்கு செல்வாக்கு குறையவில்லை எனவும் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் வைரலாக பரவி வருகிறது.
News October 17, 2025
கரூர்: குளித்தலை அருகே சட்டவிரோத மது விற்பனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்கடத்தான்பட்டி மகன் ஜெயக்குமார் (46) தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது குறித்து நங்கவரம் போலீசார் தகவல் பெற்றனர். அங்கு சென்று அதனை நிரூபித்து, ஜெயக்குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, இன்று கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.