News August 8, 2024
சின்னசேலம் அருகே விபத்து; மரணம்

சின்னசேலம் திரு.வி.க நகரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் நேற்று மூங்கில் பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் அருந்துவதற்காக கடைக்கு சென்றவர் சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரில் இருசக்கர வாகனத்தில் ஜெயராமன் மீது மோதியதில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: காதலித்து ஏமாற்றிய நபர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி: அரியலூரை சேர்ந்த மகேஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமாரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்த பிரவீன்குமார், தற்போது திருமணம் செய்து கொள்ள கேட்டபோது மகேஸ்வரியை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பிரவீன் குமார் மீது நேற்று (நவ.21) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


