News May 7, 2025
சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News January 10, 2026
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
புதுக்கோட்டை: மின்கம்பத்தில் மோதி விவசாயி பலி

வடகாடு ஊராட்சி சாத்தன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி குணசேகரன் (60). இவர் நேற்று மாலை அவரது மோட்டார் சைக்கிளில் கொத்தமங்கலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், தாறுமாறாக சென்று சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 10, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


