News April 28, 2024

சித்திரை பொருட்காட்சி மக்கள் ஏமாற்றம்

image

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமுக்கத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சி மக்களவை தேர்தலை காரணம் காட்டி இதுவரை துவங்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே  அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே.10 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என  தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 22, 2025

மதுரை : இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாநகர் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தல்லாகுளம், தெப்பக்குளம், அவனியாபுரம்,தெற்கு வாசல்,திலகர் திடல், உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 21, 2025

நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் கொடூர கொலை

image

மதுரை உலகனேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அபினேஷ் (வயது 27)நேற்று இரவு வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது மதுபோதையில் அங்குவந்த சிலர் அபினேசுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அக்கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முகம் மற்றும் உடலில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.ரத்தவெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த அபினேஷ் உயிரிழந்தார். உடலை மீட்டு கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

News April 21, 2025

மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

மதுரையில் ஏப்.29 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து , மே.8 திருக்கல்யாணம், மே.9 தேரோட்டம், மே.10 கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே.12 இல் நடைபெற உள்ளதால் அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.உங்க ஊர் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!