News April 11, 2025
சித்திரை திருவிழா – வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
BIG BREAKING: சற்று நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபத்தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது சற்று நேரத்தில் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட உள்ளது.
News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மனுதாரர் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தீபம் ஏற்றும் மனுதாரர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல் ஆணையர் லோகநாதனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளளார். திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
News December 4, 2025
JUST IN மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்..

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை 5:30 மணிக்குள் ஆஜராக கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். நீதிபதி எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு காவல் ஆணையர் லோகநாதன் பதிலளித்து வருகிறார்.


