News March 26, 2025
சிதம்பரம் கோவில் ஆயிரம் கால் மண்டபம் ரகசியம் தெரியுமா?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமாக இருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தில் எவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது தெரியுமா? இந்த மண்டபத்தில் தான் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பெரியபுராணம் அரங்கேறியது இங்குதான். மார்கழி, ஆணி, இரு திருவிழாக்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும்.
Similar News
News November 27, 2025
கடலூர்: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் கடலூர் மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
கடலூரில் பயங்கரம்: வாலிபர் அடித்துக் கொலை

கடலூர் மஞ்சகுப்பம் லோகநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (37). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (நவ 27) அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பால்ராஜை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், பால்ராஜை கொலை செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 27, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வரும் நவ.28-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாளை (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


