News April 19, 2025
சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். “ஷேர்யார்” என்ற சிங்கத்தையும் “யுகா” என்ற புலியையும் அவர் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு செயல்பாடுகளுக்கு அவரது பங்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (அக்-23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
செங்கை: பிஸ்னஸ் செய்ய சூப்பர் மானியங்கள்!

செங்கை மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன:
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE!
News October 23, 2025
செங்கல்பட்டில் இது மீண்டும் வருமா..?

செங்கல்பட்டில் வீட்டிலிருந்தே குப்பைகளை பெறும் முறை வந்த பிறகு, பல இடங்களில் மாநகராட்சி பொது குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. ஆனால், இதன் விளைவுகள் எதிர்மறையாகி பொது சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ‘வீட்டில் இருந்தே சேகரிப்பு’ எனும் முறை முற்றிலுமாக தோல்வியில் முடிந்துள்ளதால், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, உடனடியாக பொது குப்பைத் தொட்டி முறையை கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.