News April 10, 2025
சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார். இவரது மனைவி செல்லியம்மாள் கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9444930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 17, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் நகர வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.18) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணைநல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
News November 17, 2025
விழுப்புரம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


