News April 7, 2025
சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது கள்ளக்குறிச்சி அருகே விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (30) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
Similar News
News April 8, 2025
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆட்சியர் அறிவிப்பு

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in ல் மே 9 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
நகை கடையில் செயின் திருடிய பெண் கைது

நெமிலி பஜார் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவர் அதே பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதி சுசில்குமாரின் கடைக்கு வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போன்று ஒன்றை சவரன் செயினை திருடி சென்றார். நெமிலி போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ரஹானா என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று அவரை கைது போலீசார் செய்தனர்.
News April 7, 2025
நாட்டின் முதல் காந்தி சிலை

ராணிப்பேட்டை முத்துக்கடை ஜங்சனில் வைக்கப்பட்ட காந்தி சிலை தான் நாட்டிலேயே காந்திக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. காந்தி இறந்த 13 நாட்களில் ஜெயராமன் செட்டியார் என்பரால் வைக்கப்பட்ட இந்த சிலை இன்று ராணிபேட்டை அரசு பள்ளியில் உள்ளது. உலகம் முழுவதும் காந்தியின் சில உள்ள நிலையில் முதல் காந்தி சிலையை நிறுவி பெருமை பெருமை பெற்றுள்ளது ராணிப்பேட்டை. ஷேர் பண்ணுங்க