News January 2, 2025
சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவும் முதல் நேற்று அதிகாலை வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். வடபழனியைச் சோ்ந்த சாருகேஷ் (19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீா்செல்வம் (65), நுக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் (22) என 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 9, 2025
சென்னை: உங்க நிலத்தை காணமா??

சென்னை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
சென்னை: இளைஞருக்கு தலையில் வெட்டு; தந்தை, மகன் கைது

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அஜய்(22). நேற்று முன்தினம் இரவு, அஜய் குடிபோதையில் இருக்கும் போது, மது வாங்கி தருவதாக கூறி, சாமுவேல் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அஜய் – சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அஜயை அரிவாளால் வெட்டியுள்ளார். அவருடன் சேர்ந்து சாமுவேல் தந்தையும் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜய் அளித்த புகாரின்பேரில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
News December 9, 2025
சென்னை: ஸ்கேன் எடுக்க சென்றவரிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை கொளத்தூரில் தனியார் ஸ்கேன்ஸ் லேபில் கில் கவின் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக கடந்த டிச.5ஆம் தேதி, ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று (டிச.8) கில் கவின் என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


