News March 25, 2025

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (66). இவர் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஆயக்குடி நினைவிடம் அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து  அவர் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

திண்டுக்கல்: வேளாண் குறை தீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை வேளாண் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைத்து தீர்வு பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

News November 5, 2025

திண்டுக்கல்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் அறிவுரை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 5) சமூக வலைத்தளங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரையாக, வாகனக் கதவை திறப்பதற்கு முன்னர் பின்னால் வேகமாக வரும் வாகனங்களை கவனிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் சாலை பாதுகாப்பு மேம்பட்டு, சாலை விபத்துகள் குறைவடையும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News November 5, 2025

திண்டுக்கல்: காட்டு மாடு தாக்கி மூதாட்டி பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆடலூர் மலைப்பகுதியில் இன்று (நவம்பர் 5) கூலித் தொழிலாளி பாக்கியம் (60) என்பவர் காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து கன்னிவாடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!