News August 18, 2024

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்தம்

image

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால், அதில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அடையாள அட்டை திருத்த முகாமை மாநகராட்சி நடத்துகிறது.

Similar News

News October 21, 2025

BREAKING: செம்பரபாக்கம் ஏரி இன்றே திறப்பு?

image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரபாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1110 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் முழுகொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு 100 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 21, 2025

BREAKING: சென்னைக்கு 3 நாட்களுக்கு ORANGE ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

சென்னை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!