News May 7, 2025
சாலையை கடந்த புள்ளிமான் பலி

துவரங்குறிச்சி அடுத்த சொரியம்பட்டி அருகே நேற்று இரவு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மீது சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் எதிர்பாராத விதமாக மோதியதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. துவரங்குறிச்சி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடக்கும் வனவிலங்குகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
திருச்சி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
திருச்சி: சமூக நீதி நாள் முதலமைச்சர் உறுதிமொழியேற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எம்.பி-க்கள் ராஜா, திருச்சி சிவா, துரை வைகோ, அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.
News September 17, 2025
திருச்சி To டெல்லிக்கு நேரடி விமான சேவை

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்றிலிருந்து தொடங்கிய நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விமான பயணிகள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.