News April 18, 2025
சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதி பலி

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
ராமநாதபுரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமான மழை பெய்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
News November 28, 2025
பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


