News April 1, 2025
சாலையை கடக்கும்போது தண்ணீர் லாரி மோதி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (48). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் (மார்.31) பகல் 2 மணி அளவில் வெங்காடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து இரும்பேடு நோக்கி சென்ற தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார்.
Similar News
News April 10, 2025
ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில்: குண்டாஸ் பாய்ந்தது

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ஆம் தேதி ரவுடி வசூல் ராஜா (34) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில், பரத் (20) மற்றும் சிவா (19) ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
News April 9, 2025
காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்
News April 9, 2025
காஞ்சிபுரத்தில் ரூ.1000 கோடி முதலீடு: 5000 பேருக்கு வேலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோபேஸ் தொழிற்பூங்காவில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னனு உற்பத்தி சேவை திட்டத்தை நிறுவுவதற்கு ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திட்டத்தால் புதிதாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் என கூறப்படுகிறது. SHARE TO FRIENDS