News January 24, 2025
சாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News November 11, 2025
பெரம்பலூர்: TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி

பெரம்பலூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம், TNPSC குரூப்-2 மற்றும் 2 A முதன்மைத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வரும் நவ.12-ம் தேதி அன்று தொடங்கும் இந்த பயிற்சியில் மாதிரித் தேர்வுகள், வல்லுநர்களுடன் கலந்துரையாடல், நூலக வசதி ஆகியவை கிடைக்கும். முதன்மைத் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
News November 11, 2025
பெரம்பலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், இங்கே <
News November 11, 2025
பெரம்பலூர்: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஆயத்த கூட்டம் நேற்று (நவ.10) மாலை 6 மணிக்கு வருவாய் அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட, வட்டார உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் வருகின்ற 18.11.25 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.


