News August 15, 2024

சார் ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தனது வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆக.,20ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Similar News

News November 5, 2025

இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News November 5, 2025

ராம்நாடு: பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்

image

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த பானுமதி தனது கட்டப்பையில் வைத்திருந்த மணி பரிசில் ரெண்டு கிராம் அளவுள்ள தோடு ஒரு கிராம் குண்டுமணி ஒரு ஜோடி கொலுசு ரூபாய் 3000 ரொக்கம் பையோடு தவறவிட்டார். அந்தப் பையை கண்டெடுத்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் கபிலேஷ் திருமுருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தி கௌரவித்தனர்.

News November 4, 2025

ராம்நாடு: இலவச கடல் சிப்பி பயிற்சி

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 8/59, C4 – மாதவன் நகர் பகுதியில் கடல் சிப்பி பயிற்சி இலவசமாக தமிழ்நாடு அரசு சார்பில் நடைப்பெற உள்ளது. பயிற்சி காலம் 3 நாட்கள். பயிற்சி ஆரம்ப நாள் (நவ-06) முதல் (நவ-09) வரை. நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும், தொடர்புக்கு: 85 31 86 48 66.

error: Content is protected !!