News August 8, 2024
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: கூடுதல் லாபம் எனக்கூறி இளைஞரிடம் மோசடி

சிங்கம்புனரியை சேர்ந்த 39 வயதான இளைஞரை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ஒருவர் தான் குறிப்பிடும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இளைஞர் ரூ.64 ஆயிரம் பணத்தை 3 தவனைகளாக செலுத்தியுள்ளார். பின்னர் இளைஞர் பணத்தை பெற்ற நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டத்தை உனர்ந்து, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News December 4, 2025
காரைக்குடி: பள்ளி மாணவன் தற்கொலை

காரைக்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் மணிகண்டன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பெற்றோர்கள் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <


