News August 18, 2024

சாரல் திருவிழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

image

குற்றாலத்தில் சாரல் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (ஆக.18) காலை முதல் கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆணழகன் போட்டி, கோலப் போட்டி, யோகா,  நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தோல் பாவை கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக இருந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

Similar News

News December 23, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
தற்சமயம் நிர்வாகக் காரணங்களால் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தகவல்.

News December 23, 2025

தென்காசியில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை

image

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன்அய்யசாமி தென்காசி பகுதிக்கான UDAN
(உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) விமான நிலையம் அமைக்க வேண்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தராம்மோஹன் நாயுடு கிஞ்சராப்பு – இடம் டெல்லியில் நேரில் சந்தித்து இன்று கோரிக்கை மனு வழங்கினார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 23, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனிமொழி எம்பி வருகை

image

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வரும் டிசம்பர்.28ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருகை தருவதை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!