News December 5, 2024
சாம்சங் விவகாரம்- பதிவுத்துறைக்கு ஆணை

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஐடியு தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை இல்லை என சாம்சங் நிறுவனம் வாதிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
காஞ்சிபுரம்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 1, 2025
காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.
News December 1, 2025
காஞ்சிபுரம்: காணாமல் போன சிறுமிகள் போராடி மீட்பு!

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளில் 4 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்கள். புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் சென்னையில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


