News January 24, 2025
சாமிதோப்பு: கருட வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி பவனி

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்து உள்ளது. இங்கு தைத்திருவிழா கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று(ஜன.23) பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் அய்யா வைகுண்ட சாமி எழுந்தருளி வீதிகளில் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.
Similar News
News November 19, 2025
குமரி: முடி உதிர்வு காரணமாக பெண் எடுத்த முடிவு

தென்தாமரை குளம் கீழச்சாலை ஐஸ்வர்யா(27) பட்டதாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலை முடி அதிக அளவில் உதிர்ந்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். “தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல்” என அடிக்கடி புலம்பி உள்ளார். நவ.17-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
குமரி: பணி நெருக்கடி – ஊழியர் தற்கொலை முயற்சி

குழித்துறை நகராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்த்(30)க்கு ஆணையாளர் சுபிதாஸ்ரீ சில நாட்களாக அதிக பணிச்சுமை நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்து நேற்று சென்ற ஆனந்த் குளியல் அறையில் விஷம் குடித்து உள்ளார். மயங்கிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
News November 19, 2025
குரியன்விளை கோவிலில் 1008 இளநீர் அபிஷேகம்

களியக்காவிளை அருகே குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாள் தேவியின் சுயம்புவில் இளநீர் அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளான நேற்று கணபதி ஹோமம் விக்கிரமன் சுவாமி தலைமையில் நடந்தது. தொடர்ந்து தேவியின் சுயம்பு எழுந்தருளல், பக்தர்கள் சமர்பித்த 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.


