News September 28, 2024
சாத்தூர் வெடி விபத்தில் 25 வீடுகள் சேதம் – ஆட்சியர்

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பட்டாசு ஆலையில் இன்று நடைபெற்ற வெடி விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளது. ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிறவகை குடோன்களில் வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் பீடி பொருட்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 9, 2025
விருதுநகர்: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் வடகாசி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமியும் லோடுமேன் வேலை செய்து வந்தனர். இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2020-ம் ஆண்டு மாடசாமி இசக்கிமுத்துவை அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி மாடசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 9, 2025
விருதுநகர் அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி