News October 23, 2024
சாதி வன்கொடுமை புகார்: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் புகார்களை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பதிவு செய்யலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை,பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்
News November 23, 2025
திருப்பூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 23, 2025
திருப்பூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

திருப்பூர் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்து


