News February 16, 2025
சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
Similar News
News December 14, 2025
மதுரை: சாலை விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பலி.!

தும்பைபட்டி அருகே நேற்றிரவு, சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அவ்வழியாக சென்ற கார் மோதியத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து கச்சிராயன்பட்டி விஏஓ தீபன் சக்கரவர்த்தி, போலீசில் புகார் அளித்தார். காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சேலம் தலைவாசலை சேர்ந்த முகமது யூனுஸ் (29) என்பவரை கைது செய்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
மதுரை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

மதுரை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
மதுரை: குடும்பத் தகராறில் முதியவர் தற்கொலை.!

பேரையூர் அருகே கே.ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாட்டையா(60). மது போதைக்கு அடிமையான இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் தகராறு இருந்த வந்தது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வசித்து வந்த இவர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


